பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சிம்பு ஸ்ருதியை பார்த்து பாத்ரூம் மேட்டரில் நீங்கள் பேசியது சரியா என்று கேட்கிறார். மேலும் பாலாவிடம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அந்த இடத்தில்தான் நான் உடைந்து விட்டேன் என்று பாலா சிம்புவிடம் கூறுகிறார். உடனே சிம்பு நீங்கள் அழுத போது எனக்கும் அது Feel ஆனது ஏனென்றால் அந்த வலி எனக்கும் தெரியும், நானும் அது போல அழுது இருக்கிறேன் என்று பாலாவிடம் கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch Biggboss Promo Below..