வெளியேறிய அனன்யா.! வசமாக மாட்டிய நிக்சன்.! இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் உறுதி போலயே.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆறு பேர் நாமினேஷன் லிஸ்டில் சிக்கியிருந்த நிலையில் தற்போது அனன்யாவை ‘மிட் வீக் எலிமினேஷன்’ என்கிற பெயரில் பிக் பாஸ் குழுவினர் அதிரடியாக வெளியேற்றி இருக்கின்றனர். இதனால் மீதம் இருக்கும் ஐந்து பேரில் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனன்யாவின் வெளியேற்றத்தால் வாக்கெடுப்பு முடிவுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சின்னத்திரை உலகில் கொடிகட்டி பறந்து வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 6 சீசன்களை முடித்து ஏழாவது சீசனை வெற்றிகரமாக முடிக்க இருக்கிறது விஜய் டிவி.

வெளியேறிய அனன்யா.! வசமாக மாட்டிய நிக்சன்.! இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் உறுதி போலயே.! 1
இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக 23 போட்டியாளர்கள், ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என இரண்டு வீடுகள், பல விதிமுறை மாற்றங்கள் என வித்தியாசமான முறையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்று பல அதிரடி மாற்றங்களை செய்திருந்தது பிக் பாஸ் குழு. இது வரை மொத்தம் 10 பேர் வெளியேறி இருந்த நிலையில் 13 போட்டியாளர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அனன்யா ராவ் இந்த வாரம் “மிட் வீக் எலிமினேஷன்” என்கிற பெயரில் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த வாரம் நாமினேஷனில் நிக்சன், அனன்யா ராவ், கூல் சுரேஷ், விஷ்ணு, தினேஷ், விசித்ரா என்று மொத்தம் ஆறு பேர் தேர்வாகி இருந்தனர்.

இவர்களில் வழக்கம் போல் தினேஷ்,, அர்ச்சனா ஆகியோர் நமது இணையத்தளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வ மற்ற முறையில் எடுக்கப்படும் வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர். நிக்சன் மற்றும் அனன்யா ராவ் இருவருமே கடைசி இடத்தையே ஆரம்பம் முதலே பிடித்து வருகின்றனர். நமது வாக்கெடுப்பில் கடைசி இடத்தை பிடித்திருந்த நிலையில் அனன்யா ராவ் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதேபோல கடைசி இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிக்சன் இந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக எலிமினேஷனை ரத்து செய்து இருந்ததால் நிக்சன் எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தார்.


ஆனால் இந்த வாரம் வார இறுதியில் கமலஹாசன் எபிசோடு வரை காத்திருக்காமல் வாரத்தின் மத்தியிலேயே அனன்யாவை எலிமினேட் செய்து பிக்பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த வாரம் கமல் எபிசோடில் நிக்சன் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் நிக்சன் கடைசி இடத்தை பிடித்து இருக்கிறார். நிக்சன் வெளியேறுவாரா? அல்லது சுவர் குறித்த கூல் சுரேஷ் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்