“வெளிய வந்த அப்புறம் பிரதீப்கிட்ட பேசிட்டேன்” நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டியளித்த ஐஷூ.!

வெளியிட்டது

பிக் பாஸில் இருந்தே வெளியேறிய பின்னர் ஐஷு தற்போது முதல் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பிரதீப், மாயா உள்ளிட்ட பலர் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களே வந்ததாகவும், அதன் பின்னர் அது பாசிட்டிவாக மாறி கலவையான எமோஷன்களை கொடுத்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட பிக் பாஸில் இருந்த போது பெரிதாகப்பட்ட காட்டப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விசித்ரா இவர்கள் மூவருமே மிக வலிமையான போட்டியாளர்கள். இவர்களுக்கு எப்பொழுது எதை பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பது தெளிவாகத் தெரியும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

"வெளிய வந்த அப்புறம் பிரதீப்கிட்ட பேசிட்டேன்" நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டியளித்த ஐஷூ.! 1
பிக் பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்றால் அது பிரதீப் மற்றும் மாயா தான். பிரதீப் உண்மையாகவே நல்ல ஒரு நண்பன். அவர் ஒரு ஆர்வமான கேரக்டர். அதே போல மாயாவும் மிக பொழுதுபோக்கான நபர். தனக்கு நல்ல நண்பர். அதுபோல விசித்ராவிற்கும் என்னுடைய மனதில் அவருக்கென தனி இடத்தை கொடுத்திருக்கிறேன். அதே போல விஷ்ணுவும் தனக்கு பிடித்த போட்டியாளர்தான். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். என்னுடைய தவறுகளை தெரிந்து கொண்டேன். மேலும் எனக்குள் நிறைய மாற்றங்கள். யாரை நம்ப வேண்டும்? யாரை நம்பக் கூடாது? எப்போது எதை பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதெல்லாம் கற்றுக் கொண்டேன்.


என்னுடைய எலிமினேஷன் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே? என்கிற கவலை இருந்தது. இருந்தபோதிலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை என்பதால் என்னுடைய எலிமினேஷனுக்கு நான் தகுதியானவர்தான். இன்னும் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் யாரையும் நேரில் சென்று சந்திக்க முடியவில்லை. பிரதீப், மாயா என்றுதான் களம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் போகப் போக அர்ச்சனா தான் ஜெயிப்பார் என்பது எனக்கு தெரிந்து விட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்யவில்லை என்று கமெண்டுகள் வந்தது. இனி அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்” என அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்