பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி 63 வது நாளான இன்று யார் வெளியேறுவார்கள் என்கிற பரபரப்புடன் ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருவராக எழுந்து ஒவ்வொருவர் பெயரை கூறிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தினேஷ் எழுந்து விக்ரம் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியே செல்வார் என்று கூறுகிறார். பின்னர் விஜய் வர்மா எழுந்து ஜோவிகா என்ற கூற, மாயாவும் ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறுகிறார். ஆனால் கூல் சுரேஷ் எழுந்து நாங்கள் யாரை சொன்னாலும் நீங்கள் வேறு ஒரு ஆளைத்தான் சொல்லுவீங்க என்று சொல்லி கமலை கிண்டல் செய்கிறார். அதற்கு பதிலுக்கு கமலும் சிரிக்கிறார். பின்னர் எழுந்து கமல் கார்டை பார்த்துவிட்டு இது எப்படி? என்று சந்தேகமாக கேட்கிறார். இதனால் மணி, ஜோவிகா, விக்ரம் மூவரில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின்படி ஜோவிகா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television