பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சூப்பர் டூப்பர் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்த்து எழுந்துள்ளது. 63 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த வாரம் ஜோவிகா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் விளையாடி வருகின்றனர். இன்னும் 40 நாட்களே மீதம் இருப்பதால் அடுத்தடுத்து இரண்டு பேரை எலிமினேட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், பூர்ணிமா, மணி, ஜோவிகா, விக்ரம், விசித்ரா, கூல் சுரேஷ் என மொத்தம் எட்டு பேர் நாமினேஷனில் மாட்டிக் கொண்டனர். இதில் விக்ரம் மற்றும் ஜோவிகா இருவரும் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஜோவிகாவின் தாயார் வனிதா எனக்கு ஜோவிகா போன் எதுவும் செய்யவில்லை, வீட்டிற்கும் வரவில்லை என்று கூறியதால் அவர் ஒரு வேலை சீக்ரெட் ரூமில் இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் விஷ்ணுவிற்கு ஸ்டார் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஓட்டுப் போட சொன்ன பூர்ணிமாவை கமல் கேள்வி எழுப்பும் போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் வீட்டிலிருந்து வெளியேறிய போது ஸ்மால் பாஸ் வீட்டினருக்கு கோல்ட் ஸ்டார் ஒன்றை கொடுத்தார். அப்போது பூர்ணிமா மணிக்கு மூன்று ஸ்டார் இருப்பதால், விஷ்ணுவிற்கு மூன்று ஸ்டார் வரவேண்டும் எனவே விஷ்ணுவிற்கு கொடுக்க வேண்டுமென்று மற்றவர்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்தார். அதை தற்போது கமல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television