இவரு என்ன வேணும்னாலும் பண்ணுவாரா? தினேஷ் செயலால் கடுப்பான அர்ச்சனா.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 64 நாட்களைக் கடந்து 65வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் மிகுந்த சுவாரஸ்யம் குறைவாகவே இந்த சீசன் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 24 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது கூட வெறும் சமையல் அறையை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக் பாஸில் சுவாரஸ்யமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் குழு தற்போது ‘பொம்மலாட்டம்’ என்கிற டாஸ்கை வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரு என்ன வேணும்னாலும் பண்ணுவாரா? தினேஷ் செயலால் கடுப்பான அர்ச்சனா.! ப்ரோமோ இதோ 1
பொம்மையை வைத்து எப்போது டாஸ்க் கொடுக்கப்பட்டாலும் அந்த டாஸ்க் சண்டையில் முடிவது வழக்கமாக இருக்கிறது. அதுபோல தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த பொம்மலாட்டம் டாஸ்க்கிலும் பிரச்சினை கிளம்பி இருக்கிறது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் குழந்தைகளாக மாறி ரவீனா, கூல் சுரேஷ் போன்றோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதைப் பார்த்த பலரும் குழந்தைகள் போல் பண்ண சொன்னால், Cringe ஆ ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று கலாய்த்து வந்தனர். அடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனா. தினேஷ் மீது கடுப்பில் இருக்கிறார். “ஒருத்தர் பொம்மையாக மாறினால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா?” என்று கேட்டு தினேஷ் மீது கோபத்தில் இருக்கிறார்.


தேவை இல்லாமல் அவன பத்தி சொல்லு, இவன பத்தி சொல்லு என்று அவர் தன்னை கட்டாயப்படுத்துவதாக அர்ச்சனா கூற விசித்திரா நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்லி கண் கலங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்