“கருமம் அது மூஞ்சிய பாரு..சொருகிடுவேன்” அர்ச்சனாவை மிரட்டும் தொனியில் பேசிய நிக்சன்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சுமார் 67 நாட்களை கடந்து விட்டது. இறுதி கட்டங்களை நோக்கி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில் 67வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே பயங்கர சண்டை எழுந்துள்ளது் வினுஷா பற்றி அர்ச்சனா பேசியதால் கோபமடைந்த நிக்சன் அவரை ‘வாடி போடி’ என்று ஒருமையில் சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் “இந்த வீட்டில் இருக்க லாயக்கே இல்லாத ஆள் நீ தான், வீட்டை விட்டு வெளியே போடி நாயே, நீ எல்லாம் பொம்பளையே கிடையாது” என்றெல்லாம் மிகவும் கீழ்த்தரமான முறையில் வசை பாடிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கருமம் அது மூஞ்சிய பாரு..சொருகிடுவேன்" அர்ச்சனாவை மிரட்டும் தொனியில் பேசிய நிக்சன்.! 1
இந்த வாரம் நடந்த நாமினேஷனில் மணி, விசித்ரா, நிக்சன், அர்ச்சனா, தினேஷ் என்று 5 பேர் மட்டுமே சிக்கி இருந்தனர். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் “மிக்ஜாம்” புயல் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி இடத்தை பிடித்திருந்த நிக்சன் மற்றும் மணி இருவரும் தற்போது தப்பித்து இருக்கின்றனர். இந்த நிலையில் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக நேற்றைய ‘கல்லூரி காலம்’ டாஸ்கில் நிக்சன் அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கி இருந்தார். அதற்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கைதட்டி ஆரவாரம் செய்து இருந்தனர். இதனால் அர்ச்சனாவுக்கு நேற்று முதலே நிக்சன் மீது கோபம் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை விடிந்ததுமே இருவரும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர்.


இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், “நிக்சன், அர்ச்சனாவைப் பார்த்து ‘கருமம் அது மூஞ்சியை பாரேன், எப்ப பாத்தாலும் வினுஷா வினுஷான்னு பேசிட்டு இருக்கு, சொருகிடுவேன்’ என்று மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்” அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்