அர்ச்சனா பற்றி நிக்சனிடம் ஏத்தி விடும் பூர்ணிமா மற்றும் சரவண விக்ரம்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபமாக இருக்கும் நிக்சனிடம் சென்று தற்போது பூர்ணிமா மற்றும் விக்ரம் இருவரும் நன்றாக ஏத்தி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் நான் இந்த வீட்டிலிருந்து செல்கிறேன் என்று நிக்சன் பேசிக் கொண்டிருக்கிறார். இன்று காலை முதலே அர்ச்சனாவிற்கும் நிக்சனுக்கும் சண்டை தொடங்கியது. விஷ்ணு நிக்சனிடம் வினுஷா பற்றி ஏதோ கூறிக் கொண்டிருக்க, இடையில் அர்ச்சனா புகுந்து நிக்சனிடம் ஏதோ சொல்கிறார். இதனால் நிக்சனுக்கும், அர்ச்சனாவிற்கும் சண்டை பெரிதாகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொள்கின்றனர். நிதானத்தை இழந்து ‘வாடி போடி’ என்று அர்ச்சனாவை பேச ஆரம்பிக்கிறார் நிக்சன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா பற்றி நிக்சனிடம் ஏத்தி விடும் பூர்ணிமா மற்றும் சரவண விக்ரம்.! ப்ரோமோ இதோ.! 1

மேலும் அர்ச்சனாவைப் பார்த்து, ‘நீ பாதியில் வந்தவள் தானே? இந்த வீட்டை விட்டு ஓடி விடு, இனிமேல் வினுஷா பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன்’ என்கிற ரீதியில் மிக ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார். இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று காலை முதல் வெளியான ஒவ்வொரு ப்ரோமோவிலும் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டது. இந்த நிலையில் கோபமாக இருக்கும் நிக்சனிடம் சென்று அர்ச்சனா பற்றி பூர்ணிமாவும் சரவண விக்ரமும் ஏத்தி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமென்றே உன்னை இப்படி செய்கிறார்கள் என்று எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.


மேலும் “50 லட்சத்தையும் டைட்டிலையும் நீயே எடுத்துக்கொள், அதற்காக எங்களை இப்படி செய்யாதே” என்று சொல்லி பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்