பூர்ணிமா பற்றி விஷ்ணு பேசியதை எல்லாம் சபையில் உடைத்த விஜய்.! கடுப்பான விஷ்ணு.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த வாரம் ஐந்து கோல்ட் ஸ்டார் கிடைக்கும் படியாக ஒரு டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார். ஒருவர் மற்றொருவரிடம் பேசி போராடி அந்த ஐந்து ஸ்டார்களை வெல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை கடுமையாக தாக்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் வர்மா விஷ்ணுவை கடுமையாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் விஷ்ணுவும் விசித்ராவிடம் கடுமையாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூர்ணிமா பற்றி விஷ்ணு பேசியதை எல்லாம் சபையில் உடைத்த விஜய்.! கடுப்பான விஷ்ணு.! 1
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை எட்டி வருகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வாரம் மிக்ஜாம் புயலால் மக்கள் வாக்களிக்க முடியாத காரணத்தால் இந்த எலிமினேஷனை ரத்து செய்து இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் நிக்சன் அல்லது மணி இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலிமினேஷன் ரத்தால் இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைக்கான ப்ரோமோவில் ஐந்து கோல்ட் ஸ்டார் கொடுப்பதற்கான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வைத்துள்ளார்.


அதில் கோல்ட் ஸ்டார் பெறுவதற்கு தான் ஏன் தகுதியானவர் என வாதிடலாம், அல்லது மற்றவர்கள் ஏன் தகுதி இல்லை என வாதிடலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனால் ஒருவர் ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்