விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கமலஹாசன் அர்ச்சனாவை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். 4 வாரத்திற்கு முன்பு வெளியேறி போன வினுதா பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்? உங்களுக்கு சீட்டுக்கட்டில் ஆட்டம் கிடைக்க வில்லை என்றால் ஜோக்கரை பயன்படுத்துவது போல வினுஷாவை பயன்படுத்தாதீர்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அர்ச்சனா திணறிக் கொண்டிருக்கிறார். அப்போது குறிக்கிடும் நிக்சன், “தான் வெளியே சென்று அந்தப் பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என தமிழ் முன்பு கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வினுஷாவின் உடல் அமைப்பு பற்றி நிக்சன் கூறியது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இது யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், பிளாஸ்மா டிவியில் நிக்சன் கூறிய வார்த்தைகளை போட்டு காட்டி உலகம் முழுவதும் அவரைப் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு பிக் பாஸே வழி வகுத்திருந்தார். இந்த பிரச்சனையை வெளியிலிருந்து சென்ற விஜய் வர்மா, அனன்யா மற்றும் அர்ச்சனா என அனைவரும் நிக்சனை தொடர்பு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் முற்றுப் போகவே இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை பெரிதானது. வினுஷாவைப் பற்றி பேசினால் ‘சொருகி விடுவேன்’ என்று சொல்லி கோபத்தின் உச்சிக்கே சென்று கத்திக் கொண்டிருந்தார் நிக்சன்.
இந்த வார்த்தைகளுக்காக அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. மூன்று முறை மஞ்சள் அட்டை வாங்கினால் வெளியேற்றப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அர்ச்சனாவிடம் நீங்கள் எதற்காக நான்கு வாரங்களுக்கு முன்பு நடந்த கதையை பேசுகிறீர்கள்? என்று சொல்லி கமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அர்ச்சனா திணறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television