தான் வென்ற புள்ளிகளை பூர்ணிமாவிற்கு விட்டுக் கொடுத்த அர்ச்சனா.! வேற லெவல் சம்பவம்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 75 நாட்களை நிறைவடையும் நிலையில் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி இருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மொத்தம் 6 சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 75வது நாளில் 15 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நாமினேஷன் இல்லை என்று கூறப்பட்டதால் இந்த வாரம் கண்டிப்பாக இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தான் வென்ற புள்ளிகளை பூர்ணிமாவிற்கு விட்டுக் கொடுத்த அர்ச்சனா.! வேற லெவல் சம்பவம்.! 1
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குள் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நடனம் ஆடுபவர்களுக்கு பிக் பாஸ் கரன்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக ரவீனா தனக்கு கிடைத்த பணம் அனைத்தையும் மணிக்கு கொடுத்து அவரை முதலிடத்திற்கு வரச் செய்திருக்கிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கும், பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்களுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியாக குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.


அதில் டிக்கெட் டூ ஃபினாலேவில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத அர்ச்சனா தான் பெற்ற ஒரு புள்ளியை யாருக்கு கொடுக்க நினைக்கிறார் என்று பிக் பாஸ் கேட்க, நீண்ட யோசனைக்கு பின்னர் அர்ச்சனா பூர்ணிமாவின் பெயரை கூறுகிறார். இதனால் பூர்ணிமா அதிர்ச்சியில் உறைந்து போய் அர்ச்சனாவை கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் கண்கலங்குகிறார். அப்போது மாயா உங்கள் இருவரின் ஃபேவரட்டிசப் என் விளையாட்டை பாதிக்கிறது என கடுப்பில் கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Disney + Hotstar Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்