மிட் வீக் எலிமினேஷனில் இன்றைக்கே ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்த பிக்பாஸ்.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக “மிட் வீக் எலிமினேஷன்” என்று சொல்லி ஒரு போட்டியாளரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுகின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டு இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து 75 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னமும் 13 போட்டியாளர்கள் போட்டியில் விளையாடுவதால் விரைவில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஐந்து பேரை இறுதி மேடைக்கு அழைத்துச் செல்ல பிக் பாஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிட் வீக் எலிமினேஷனில் இன்றைக்கே ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்த பிக்பாஸ்.! ப்ரோமோ இதோ 1

இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் டான்ஸ் மாரத்தான் தொடங்கி பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் பல குளறுபடிகளை செய்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மீது அதிருப்தி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கார்டன் ஏரியாவில் நாமினேட் ஆன நபர்களின் புகைப்படங்களை ஒன்றாக சேர்க்குமாறு பிக்பாஸ் கூறுகிறார். யாரின் புகைப்படம் ஒன்றாக சேரவில்லையோ அந்த நபர் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டுள்ளது.


நாமினேஷனில் இருக்கும் தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், விஷ்ணு, அர்ச்சனா, அனன்யா ஆகியோர் புகைப்படங்களை ஒன்றாக இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலருக்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேரவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Televison

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்