கார்டை எடுத்துக்காட்டிய கமல்.! நிக்சனா? கூல் சுரேஷா? வெளியான அதிரடியான ப்ரோமோ இதோ

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்க்கான கடைசி ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் கார்டை எடுத்துக் காட்டி யார் வெளியேறுவார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது விஷ்ணு, கூல் சுரேஷ், நிக்சன் ஆகியோரை கடைசி இடத்தில் அமர வைத்து கமல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். 6 சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கார்டை எடுத்துக்காட்டிய கமல்.! நிக்சனா? கூல் சுரேஷா? வெளியான அதிரடியான ப்ரோமோ இதோ 1

ஏழாவது சீசன் தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இறுதி கட்டங்களை நோக்கி இந்த நிகழ்ச்சியை நகர்ந்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் இந்த வாரம் விளையாடி வந்தனர். “மிட் வீக் எலிமினேஷன்” என்று சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பு அனன்யா ராவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி இருந்தனர். தொடர்ந்து இந்த வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், அது நிக்சனாக தான் இருக்கக்கூடும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தனக்கு 2 ஆம்பலேட் போட்டு சாப்பிட பிடிக்கும் என்று சொல்லி இரண்டு எலிமினேஷனை அறிவிக்கிறார். யாரும் எதிர்பாராத வண்ணம் கூல் சுரேஷ் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்