வந்த வேகத்தில் ரவீனாவின் உறவினர்களை வெளியில் அனுப்பிய பிக்பாஸ்.! காரணம் இதுதான்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இதில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் தாயார் உள்ளே வராமல் அவரது உறவினர் ஒருவரை உள்ளே அனுப்பி இருக்கிறார். உள்ளே வந்த உறவினர் வெளியில் நடந்த விஷயங்களை கூறுவதாலும், குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தி சில விஷயங்களை கூறியதாலும் பிக் பாஸ் அவர்களை வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றி இருக்கிறார். இதனால் ரவீனா மனமுடைந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வந்த வேகத்தில் ரவீனாவின் உறவினர்களை வெளியில் அனுப்பிய பிக்பாஸ்.! காரணம் இதுதான்.! 1

பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசனில் மணி, ரவீனா இருவரும் முக்கியம் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் வெளியிலிருந்து நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் வீட்டிற்குள் இவர்கள் காதலர்களாக தங்களை காட்டிக் கொண்டனர். இது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. எப்போதும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது, ஒருவருக்கொருவர் ஆதரவாக விளையாடுவது என்று மணி ரவீனா இருவரும் ஒன்றாகவே இருந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ரவீனாவில் அம்மா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் உள்ளே வந்திருக்கிறார்.


ரவீனாவின் தாயார் உள்ளே வருவதற்கு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக உள்ளே வந்த உறவினர் வெளியில் ரவீனாவிற்கு கெட்ட பெயர் இருப்பதையும், அவருக்கு குறியீடு வார்த்தை ரெட் என்றும் அவர் கூறியதால் பிக் பாஸ் அவர்கள் இருவரையும் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்