விக்ரம் தங்கச்சி ரொம்ப ஓவரா பண்றாங்க.! இந்த வாரம் அவன் எலிமினேட் ஆனா மூஞ்ச எங்க வச்சிப்பாங்க

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்றைக்கான ப்ரோமக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது் அதில் தற்போது மாயா, சரவணன் விக்ரம் குறித்து மிக மோசமாக விமர்சிக்கிறார். “அவன் எல்லாம் என் பிரண்டே கிடையாது” என்று சொல்லி அவர் பேசும் காணொளியை தற்போது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைக்கு 82வது நாளை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என உள்ளே வரும் அந்த டாஸ்க் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் தங்கச்சி ரொம்ப ஓவரா பண்றாங்க.! இந்த வாரம் அவன் எலிமினேட் ஆனா மூஞ்ச எங்க வச்சிப்பாங்க 1
இந்த டாஸ்க்கில் விசித்திரா தவிர அனைவரின் பெற்றோர்களும் உள்ளே வந்துவிட்டனர். விசித்ராவின் மூன்று பிள்ளைகள் மற்றும் கணவர் என அனைவரும் எப்போது உள்ளே வருவார்கள் என்கிற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. எதற்காக விசித்ராவின் குடும்பத்தினர் மட்டும் இன்னும் வராமல் இருக்கிறார்கள் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க தற்போது பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல மாயாவும் பூர்ணிமாவும் புறணி பேசத் தொடங்கி இருக்கின்றனர். சரவணவிக்ரம் மாயாவையும் பூர்ணிமாவையும் தனது நல்ல நண்பர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாயா சரவண விக்ரம் குறித்து மோசமாக விமர்சனம் செய்கிறார்.

விக்ரமின் தங்கை கூறும் பொழுது, “மாயா மற்றும் பூர்ணிமா இருவரையும் நம்ப வேண்டாம். பூர்ணிமாவை கூட ஏற்றுக் கொள்வேன், ஆனால் மாயா உன்னை மிகவும் மோசமாக நடத்துகிறார்” என்று சரவணன் விக்ரமுக்கு அறிவுரை கூறி இருந்தார். இந்த நிலையில் சரவண விக்ரம் குறித்து பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருக்கும் மாயா, “அவன் என் பிரண்டே கிடையாது, இனிமே அவனும் ஒரு சாதாரண ஹவுஸ்மேட்ஸ் தான். இந்த வாரம் வெளியேறி விட்டால் மூஞ்சை கொண்டு எங்க வச்சுப்பான்?” என்றெல்லாம் பேசியிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்