எங்க அம்மா வந்து இருந்தா இரண்டு மடங்கா கேட்டு இருப்பாங்க.! மணியை அதிர வைத்த ரவீனா.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 82 நாட்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைக்கு ரவீனாவின் உறவுக்கார பெண் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். அவர் மணி மற்றும் ரவீனா இருவரின் காதலையும் திட்டி தீர்த்து இருந்தார். இதை தொடர்ந்து தற்போது ரவீனாவிடம் பேசும் மணி, உங்கள் அம்மா வந்திருந்தால் கூட இப்படி “எல்லாம் செய்திருக்க மாட்டார்” என்று சொல்ல, “எங்கள் அம்மா வந்திருந்தால் இன்னும் இரண்டு மடங்காக கூறியிருப்பார்” என்று ரவீனா பதிலளிக்கிறார். மேலும் “குண்டுப் பையா” என்று மணி கூப்பிடுவதை விரும்பாத ரவீனாவின் உறவினர் அதை நிறுத்துமாறு கூறியிருந்த நிலையில், மணி பலமுறை குண்டு பையா என்று கூறி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எங்க அம்மா வந்து இருந்தா இரண்டு மடங்கா கேட்டு இருப்பாங்க.! மணியை அதிர வைத்த ரவீனா.! 1

நேற்றைய தினம் நடந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் தாயார் உள்ளே வர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ரவீனா மற்றும் மணியின் காதலை வெளியில் பலரும் கலாய்த்து வருவதுதான். இதற்கு ரவீனாவின் தாயார் பல பேட்டிகளில் விளக்கம் அளித்தும் ட்ரோல்ஸ்களும் மீம்ஸ்களும் இன்னும் குறையாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனது தோழியையும், தனது மகனையும் உள்ளே அனுப்பி வைத்திருந்தார் ரவீனாவின் தாயார். உள்ளே வந்த ரவீனா தாயாரின் தோழ ரவீனா மற்றும் மணியை திட்டித தீர்த்தார். மேலும் ரவீனா உடன் இனி நெருங்கி பழகுவதோ அவரை கூப்பிட்டு அறிவுரை கூறுவதோ கூடாது என்று மணியை எச்சரித்து விட்டு சென்று சென்றார்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மணி ரவீனாவிடம், “உங்கள் அம்மா வந்திருந்தால் கூட என்னை இப்படி திட்டி இருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார். அதற்கு ரவீனா எங்கள் அம்மா வந்திருந்தால், “இன்னும் இரண்டு மடங்காக திட்டி இருப்பார்” என்று கூற, நான் குண்டு பையா என்று சொன்னதை எல்லாம் கூட அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லி குண்டு பையா குண்டு பையா குண்டு பையா என்று பலமுறை கூறுகிறார். இதை பார்த்து ரவீனா, “அந்த ஆன்ட்டியை நல்லா காண்டு ஏத்துறீங்க” என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்