விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பலரும் மிக ஆவலாக எதிர்பார்த்த விசித்ராவின் குடும்பத்தினர் தற்போது வருகை தந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்து விசித்ரா நெகழ்ச்சியுடன் கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அந்த நெகழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7. 81 நாட்கள் முடிந்து இன்று 82வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் என்று சொல்லப்படும் உறவினர்கள் பிக் பாஸ் இல்லத்திற்கு வரும் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 11 போட்டியாளர்களில் 10 போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள் வருகை தந்திருக்கின்றனர். ஆனால் விசித்ராவின் குடும்பத்தினர் மட்டும் இன்னும் வருகை தராமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது விசித்ராவின் கணவர் ஷாஜி பிக் பாஸ் இல்லத்திற்குள் வருகை தருகிறார். அவரை பார்த்த விசித்ரா கண் கலங்கி அழுகிறார். மேலும் தனது இரட்டை மகன்களும் மற்றும் மூத்த மகனையும் அழைத்து வரவில்லையா? என்று சொல்லி அவர் கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அப்போது பிக் பாஸ் விசித்ராவை கன்பெஷன் ரூமுக்கு வருமாறு அழைக்கிறார்.
கன்பெஷசன் ரூமில் இருந்து வெளியே வந்த பின்னர் அவரது மூன்று மகன்களும் அங்கு சர்ப்ரைஸ் ஆக வந்து அமர்ந்திருக்கின்றனர். அவர்களை பார்க்க விசித்ரா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television