பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றையக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஷ்ணு பற்றி நிக்சன் கூற கூற கமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 84 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் விசித்ரா, ரவீனா மற்றும் சரவணன் விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி இருந்த நிலையில், அவர்களில் சரவணன் விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரவணன் விக்ரம் ஆரம்பம் முதலே எந்த ஒரு பிரச்சனைக்கும் வாய் திறக்காமல் அமைதியான போட்டியாளராகவே இருந்து வந்தார். அவர் எப்படி இத்தனை நாட்கள் கடந்தார்? என்பது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும் அவர் 84 நாட்கள் தாக்கு பிடித்து இந்த வீட்டில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் முடிவுகள் மிகக் கடுமையாக இருந்தது. குறி பார்த்து மூன்று பேரை மட்டும் தட்டித் தூக்கி இருந்தனர் ஹவுஸ் மேட்ஸ். அதில் தற்போது சரவணன் விக்ரம் வசமாக மாட்டி, வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஒரே லூப்பிலேயே யார் மாட்டிக் கொண்டிருப்பது? என்று கமல் கேள்வி எழுப்புகிறார்.
அப்போது விஷ்ணு எழுந்து விசித்ராவை கூறுகிறார். தினேஷ் எழுந்து ரவீனாவை கூறுகிறார். அவருடைய சிரிப்பு சத்தம் எப்பொழுதும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். அதனால் அவர் லூப்பில் இருக்கிறார் என்று கூறுகிறார். அதே போல விஜய் எழுந்து மாயாவை கூறுகிறார். பின்னர் நிக்சன் எழுந்து விஷ்ணுவை கூறுகிறார். “விஷ்ணு ப்ரோ எப்பவுமே கேம் கேம் என்று இருப்பார். இந்த வாரம் சார் வருவாரா? எத்தனை முட்டை? எத்தனை எலிமினேஷன் இருக்கும்? சார் பசியா இருப்பாரா? அல்லது டயட்டில் இருப்பாரா?” என்று எப்போதும் கேம் பற்றியே விஷ்ணு யோசித்துக் கொண்டிருக்கிறார் என விஷ்ணுவை கலாய்க்கிறார். இதை கேட்கும் கமல் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television