இந்த வாரம் நடக்கும் ஓபன் நாமினேஷன்..! பயங்கரமாக மோதிக் கொள்ளும் மாயா மற்றும் விஷ்ணு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இன்றுடன் 85 நாட்களை நிறைவு செய்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களே மீதம் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாது அளவிற்கு விறுவிறுப்புடன் இந்த சீசன் நடைபெற்று வருகிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட, மீதம் பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். வைல்ட் காடு என்ட்ரியாக வந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா உடன் இணைந்து பூர்ணிமா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா, மாயா, விசித்ரா மற்றும் விஷ்ணு ஆகியோர் இந்த போட்டியில் தொடர்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடக்கும் ஓபன் நாமினேஷன்..! பயங்கரமாக மோதிக் கொள்ளும் மாயா மற்றும் விஷ்ணு.! 1
கடந்த வாரம் நடந்த நாமினேசன் பிராசஸில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். இதில் விக்ரம் குறைந்த ஓட்டுகளைப் பெற்ற காரணத்தினால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் வெளியில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இந்த முடிவை சற்றும் எதிர்பாராத சரவணன் விக்ரம் அதிர்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் பலரும் மாயா மற்றும் நிக்சனை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிக்சன் ஓப்பன் நாமினேசன் என்றால் ஒரு மாதிரியும் க்ளோஸ் நாமினேஷன் என்றால் ஒரு மாதிரியும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.


அதை மாயாவும் கைதட்டி வரவேற்கிறார். பின்னர் மாயா எழுந்து நீங்கள் சொல்லும் காரணங்களை எல்லாம் பார்த்தால் சிரிப்பாக வருகிறது என்று கூற, விஷ்ணு கோபமடைகிறார். விஷ்ணுவிற்கும் மாயாவுக்கும் இடையே சண்டை எழுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்