மீண்டும் மணிக்காக விளையாடும் ரவீனா.! கடும் கோபத்தில் கத்தும் நிக்சன்.! ரவீனா செய்வது சரியா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இன்றுடன் 86 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இன்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே மீதம் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாது அளவிற்கு விறுவிறுப்புடன் இந்த சீசன் நடைபெற்று வருகிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட, மீதம் பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். வைல்ட் காடு என்ட்ரியாக வந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா உடன் இணைந்து பூர்ணிமா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா, மாயா, விசித்ரா மற்றும் விஷ்ணு ஆகியோர் இந்த போட்டியில் தொடர்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மணிக்காக விளையாடும் ரவீனா.! கடும் கோபத்தில் கத்தும் நிக்சன்.! ரவீனா செய்வது சரியா? 1

அதில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் ஓப்பனாக நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் பலரும் மாயா மற்றும் நிக்சனை நாமினேஷனில் தள்ளி இருந்தனர். தொடர்ந்து விஷ்ணு, மாயா, நிக்சன், மணி, ரவீனா, தினேஷ், விஜய் வர்மா ஆகியோருக்கு அதிக வாக்குகள் கிடைத்து நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதனால் யார் வெளியேறுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் வெற்றி பெறும் நபர்கள் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வது உறுதியாகும். இந்த போட்டியில் தற்போது ரவீனா மணி இருவரும் மீண்டும் ஒன்றாக விளையாடவில்லை என்று தெரிகிறது. இதனால் நிக்சன் கோபத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்