“என்னடா வரவன் எல்லாம் என்ன பத்தி தப்பாவே சொல்றானுங்க.!” புலம்பித் தள்ளிய விஷ்ணு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சின்ன மருமகள்’ சீரியலின் பிரமோஷனுக்காக அதில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர். உள்ளே வந்த சீரியலின் ஹீரோ நவீன் தனது நண்பன் விஷ்ணு விளையாடிய கேமை திட்டிவிட்டு செல்கிறார். இதனால் விஷ்ணு புலம்பி தள்ளுகிறார். அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்னடா வரவன் எல்லாம் என்ன பத்தி தப்பாவே சொல்றானுங்க.!" புலம்பித் தள்ளிய விஷ்ணு.! 1
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கப்பட்டு ,விரைவில் முடிய இருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7. தற்போது இந்த நிகழ்ச்சியில் எட்டு பேர் விளையாடி வந்த நிலையில் ரூ.16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். இதனால் தற்போது மீதம் ஏழு பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விசித்ரா, தினேஷ், மாயா, மணி, அர்ச்சனா, விஜய் வர்மா மற்றும் விஷ்ணு ஆகிய ஏழு பேர் மீதம் விளையாடி வருகின்றனர். இந்த வார இறுதியில் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டு மீதம் இருக்கும் ஐந்து பேரை இறுதி மேடைக்கு அழைத்துச் செல்ல பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ‘சின்ன மருமகள்’ என்கிற சீரியலின் ப்ரோமோஷன் பணிகளுக்காக தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு அதில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இருவரும் வருகை தந்திருக்கின்றனர்.


இந்த சீரியலின் ஹீரோ நவீனும் விஷ்ணுவும் வெளியில் நல்ல நண்பர்கள். உள்ளே வந்த நவீன் விஷ்ணுவைப் பார்த்து_ “நான் உன்னை நன்றாக கேட்க வேண்டும். என்று தான் வந்தேன் ஆனால் எதுவும் கேட்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்” எனக்கு கூறுகிறார். அதற்கு விஷ்ணு, “இதை நேற்று சொல்லியிருந்தால் நான் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் இருப்பேனே” என சொல்லி மற்ற ஹவுஸ் மேட்ஸிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்