ரெண்டு பேரும் கை கொடுத்து பிரெண்ட்ஸ் ஆகிக்கோங்க.! தினேஷ் விசித்ரா சண்டையை முடித்து வைத்த கமல்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 98வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் கமலஹாசன் கார்டை எடுத்து நீட்டுகிறார். அதில் விசித்ராவின் பெயர் இருக்கிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். குறிப்பாக மாயா மற்றும் அர்ச்சனா இருவரும் விசித்ராவின் வெளியேற்றத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரெண்டு பேரும் கை கொடுத்து பிரெண்ட்ஸ் ஆகிக்கோங்க.! தினேஷ் விசித்ரா சண்டையை முடித்து வைத்த கமல்.! 1
அடுத்த வாரத்துடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. பலரும் விரும்பி பார்த்து வந்த இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் அர்ச்சனா தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்த அனைவரும் நாமினேட் ஆகியிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக விசித்ரா எலிமினேட் ஆகியிருக்கிறார். இந்த வெளியேற்றத்தை மாயா, அர்ச்சனா உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் கூட இந்த வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.


குறிப்பாக மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் பெரிய அளவில் விளையாட்டுக்கு பங்களிப்பை கொடுக்காத நிலையில் இத்தனை நாட்களாக ஏதாவது சண்டை போட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக வைத்திருந்த விசித்ராவை வெளியே அனுப்பி விட்டீர்களே? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்