“இவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்ன அவ்ளோ காயப்படுத்தி இருக்கு” வேதனையில் அர்ச்சனா

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் கடைசி நாளில் புது டாஸ்க் ஒன்றை தற்போது பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இந்த டாஸ்க்கிலும் வழக்கம் போல ஹவுஸ் மேட்ஸ், மற்ற ஹவுஸ் மேட்ஸை தாழ்த்திப் பேசி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு தற்போது நிறைவு நாட்களை எட்டி இருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்ன அவ்ளோ காயப்படுத்தி இருக்கு" வேதனையில் அர்ச்சனா 1
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள், அதன்பின்னர் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்று மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறு பேர் மட்டுமே மீதம் விளையாடி வருகின்றனர். மற்ற அனைவரும் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இறுதி மேடையை அலங்கரிப்பதற்கு மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் நாளுக்கு நாள் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 99வது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.


அதில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில், “நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி மற்ற போட்டியாளரை காட்டிலும் சிறப்பானவர்கள்?” என்று பிளாஸ்மா முன்பு நின்று விளக்கும்படி கூறுகிறார். இதனால் மீண்டும் பிரச்சனை வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்