பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் 103வது நாளுக்கான ப்ரோமோக்கள் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் மணி மற்றும் ரவீனா இருவரின் காதலில் தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ன் இந்த வார இறுதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஃபினாலே என்பதால் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று ரவீனா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்திருந்தார். இதனால் மீண்டும் மணி மற்றும் ரவீனா இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ரவீனா தற்போது மணியிடம் சென்று, “என்னை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு செல்கிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் மணி, “எனக்கு சில விஷயங்கள் செட் ஆகவில்லை என்றால் அது செட் ஆகாமலே போய்விடும், எதற்காகவும் நான் இந்த விஷயத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்று கூறுகிறார். அப்போது ரவீனா, “அனைத்தையும் மறந்து விடுங்கள்” என்று கூறுகிறார்.
பின்னர் வெளியில் சென்று பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று சொல்லி ரவினா கூற, ஆமாம் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று கூறி மணி அங்கிருந்து எழுந்து செல்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television