இந்த சீசனின் கடைசி வாக்கெடுப்பு முடிவுகள்.! கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த மாயா – பூர்ணிமா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி நாமினேஷன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. வாக்கெடுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றனர். எனவே இந்த மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இந்த வாரம் வெளியேறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக விளங்கிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆறு சீசன்களை முடித்து ஏழாவது சீசன்களை தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த சீசனின் கடைசி வாக்கெடுப்பு முடிவுகள்.! கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த மாயா - பூர்ணிமா.! 1

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள், பின்னர் ஒரு மாதம் கழித்து ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்று மொத்தம் 23 பேருடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போது 15 போட்டியாளர்கள் வெளியேறிவிட, மீதம் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே பங்கெடுத்து வருகின்றனர். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதியாகி இருக்கிறார். விஷ்ணு தவிர்த்து இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, மணி, தினேஷ், விசித்ரா, விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா என்று ஏழு பேரும் நாமினேட் ஆகியிருந்தனர். இதில் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் மாயா மற்றும் பூர்ணிமா ஆரம்பம் முதலே கடைசி இடங்களை பிடித்து வந்தனர்.


இவர்களில் இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த வார இறுதியில் மாயா மற்றும விஜய் வர்மா இருவரையும் எலிமினேட் செய்துவிட்டு மீதமிருக்கும் விஷ்ணு, அர்ச்சனா, மணி, தினேஷ், விசித்ரா ஆகிய ஐவரையும் இறுதி மேடைக்கு அழைத்துச் செல்ல பிக் பாஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு இந்த சீசன் நிறைவடையை இருக்கிறது.

நமது இணையதளத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்பு முடிவுகள் மக்களின் மனங்களையே பெரும்பாலும் பிரதிபலித்து வந்திருக்கிறது. ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டு வேறு நபர்கள் வெளியேறிய நிகழ்வுகளும் நடந்தது உண்டு. இருந்த போதும் 99 சதவீதம் சரியான முடிவுகளையே அளித்து வருகிறது நமது தமிழ்க்ளிட்ஸ் இணையதளம். நாளை ஒருநாள் மீதம் இருக்கும் நிலையில் நீங்களும் தற்போது நீங்கள் விரும்பிய போட்டியாளர்களுக்கு வாக்களிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி வாக்களிக்கவும்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்