பிக்பாஸ் சீசன் 7ல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. விசித்ராவும் அர்ச்சனாவையும் வொர்ட்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தேர்ந்தெடுத்த நிலையில் அவர்களை ஜெயிலுக்கு அனுப்ப கேப்டன் தினேஷ் உடைகளுடன் வருகிறார். அப்போது தங்களால் ஜெயிலுக்கு போக முடியாது என்று சொல்லி அர்ச்சனாவும் விசித்திராவும் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். இதனால் கேப்டன் தினேஷ் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு எதிராக திரும்பி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவைப் பார்த்ம பலரும் கேப்டன் தினேஷும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு எதிராக திரும்பி விட்டாரோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. முதலில் கோர்ட் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்கிற டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க்கில் ஆண் போட்டியாளர்கள் பெண்களைப் போலவும், பெண் போட்டியாளர்கள் ஆண்களைப் போலவும் வேடம் அணிந்து இருந்தனர். இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டாஸ்க்குகளில் சரியாக பங்கெடுத்துக் கொள்ளாத இருவரை தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரையுமே தேர்ந்தெடுத்திருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தங்களை வொஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் என்று தேர்ந்தெடுத்தது சரியில்லை. எனவே எங்களால் ஜெயிலுக்குப் போக முடியாது என்று சொல்லி இருவரும் தர்ணாவில் ஈடுபடுகின்றனர்.
அப்போது கேப்டன் தினேஷ் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் அவர்களை நான் ஸ்மால் பாக்ஸ் வீட்டிலும், பிக் பாஸ் வீட்டிலும் விடப்போவதில்லை என்று சொல்லி மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் இருவரையும் கார்டன் ஏரியாவில் வெளியில் படுத்து உறங்குமாறும் செய்துவிட்டார். இதனால் தினேஷ் இப்படி செய்து விட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television