நிக்ஸன் பற்றி விசித்ரா கூறிய ஒரு வார்த்தை.! கை தட்டல்களால் அதிர்ந்த அரங்கம்.! மிரண்டு பார்த்த கமல்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 48வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க் குறித்து தற்போது கமல்ஹாசன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மாயா பற்றி மணி கமலிடம் போட்டு கொடுக்கிறார். பின்னர் விசித்ரா தன்னுடைய பாசம் குறித்து நிக்‌ஸன் பேசியது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆடியன்ஸ் பக்கத்திலிருந்து கைதட்டல்கள் பறக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சீசன் 7 தொடங்கி 48 நாட்கள் கடந்து விட்டது. இந்த வாரம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பது, உன்னைப் போல் ஒருவன் என்கிற இரண்டு டாஸ்க்குகள் வைக்கப்பட்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிக்ஸன் பற்றி விசித்ரா கூறிய ஒரு வார்த்தை.! கை தட்டல்களால் அதிர்ந்த அரங்கம்.! மிரண்டு பார்த்த கமல்.! 1
ஆனால் இந்த இரண்டு டாஸ்க்குகளையும் போட்டியாளர்கள் சரிவர செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். சுவாரஸ்யம் குறைவாகவே போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.இது பார்க்கும் ரசிகர்களுக்கும் சுணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் கமல் எபிசோடு அனல் பறக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் கூல் சுரேஷ் அர்ச்சனாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடத்து இருந்தார். இது குறித்து பேசிய அர்ச்சனா, “ஏன் அர்ச்சனாவின் கதாபாத்திரத்தை எடுத்து இவ்வளவு நன்றாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி கூல் சுரேஷ் பலரிடம் திட்டு வாங்கியிருக்கிறார்” என்று கமலிடம் கூறினார்.

அப்போது கமல் யார் உங்களை திட்டினார்கள் என்று கூல் சுரேஷிடம் கேட்ட, அவர், மணி விஷ்ணு என்று பதிலளிக்கிறார். ஆனால் மணி எழுந்து நாங்கள் அப்படி கூறவில்லை மாயா தான் அப்படி கூறினார் என்று போட்டு உடைக்கிறார். இதனால் மாயாவின் முகமே வாடிப் போய்விட்டது. பின்னர் விசித்ரா எழுந்து நிக்ஸன் தான் காட்டிய அன்பை கொச்சைப்படுத்தும் விதமாக நடித்துக் காட்டியதாக கூற, அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்