பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் 14 பேரில் மூன்று பேரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு, மூன்று பேரை வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே இறக்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. சண்டை, சச்சரவு என ஆரம்பம் முதலில் அதிரடியாக தொடங்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் 18 போட்டியாளர்கள், பின்னர் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்று 23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது அடுத்த அதிரடியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று கொடுக்கப்படும் டாஸ்க்கில் தோற்றால் வீட்டிலிருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, வைல்டு கார்டாக வரும் மூன்று பேருக்கு வழி விட வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது பிக்பாஸ் வீடு பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது.
ஏற்கனவே இறக்கப்பட்ட ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களில் அன்னபாரதி மற்றும் கானாபாலா வெளியே அனுப்பப்பட்டிருந்தனர். பிராவோ விறுவிறுப்பான எந்த விஷயத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே இப்போது அனுப்பப் போகும் மூன்று பேரை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து அனுப்புமாறு ரசிகர்கள் பிக்பாஸ் குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television