பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான 3வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சர்க்கரையை திருடிய விசித்ராவிற்கும் தினேஷுக்கும் இடையே தற்போது சண்டை எழுந்துள்ளது. விசித்ராவிற்கு ஆதரவாக பேசிய பூர்ணிமாவையும் தினேஷ் கடுமையாக எதிர்க்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 சுமார் 52 நாட்களை கடந்து விட்டது. இன்றைக்கு காலை ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் தோற்றால் வீட்டில் இருந்து சர்க்கரை அல்லது உப்பில் ஏதேனும் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வியே தழுவினர். எனவே வீட்டிலிருந்து சர்க்கரையை பிக் பாஸ் எடுத்து ஸ்டோர் ரூமில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் விசித்ரா மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒரு பாக்கெட்டில் சர்க்கரை மற்றும் உப்பை எடுத்து ஒளித்து வைக்கின்றனர். அதில் உப்பை மட்டுமே தினேஷ் கண்டுபிடித்து விட்டார். ஆனால் சர்க்கரையை கொடுக்க ஹவுஸ்மேட்ஸ் மறுக்கின்றனர். சர்க்கரையை ஜோவிகா ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும் பொம்மைகளில் ஒளித்து வைத்து விடுகிறார். ஆனால் தினேஷோ விசித்ராதான் சர்க்கரையை எடுத்து வைத்திருப்பதாக கூறி அவரிடம் தொடர்ந்து சர்க்கரை கொடுக்குமாறு கேட்கிறார். அதனால் தன்னிடம் சர்க்கரை இல்லை என்று சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார் விசித்ரா. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சர்க்கரையை திருடிக் கொண்டு இவ்வளவு கேவலமாக விளையாடுகிறீர்கள் என்று விசித்திராவை தினேஷ் திட்டுகிறார்.
உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையைத் திருடி வைத்திருக்கிறீர்களே? இதெல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சொல்லி காட்டமான வார்த்தைகளை விடுகிறார். மேலும் விசித்தாவிற்கு ஆதரவாக பேசிய பூர்ணிமாவிடம் தினேஷுக்கும் சண்டை வருகிறது. இந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television