விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிக் பாஸ் இரண்டாவது பூகம்பம் டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். கைகளில் ஒரு குச்சியில் பந்தை பிடித்தபடியே போட்டியாளர்கள் மூன்று நிமிடங்கள் நிற்க வேண்டும். பந்தை கீழே விட்டு விட்டால் வீட்டிலிருந்து சர்க்கரை அல்லது உப்பு ஏதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சர்க்கரையும் உப்பையும் எடுத்து பல இடங்களில் ஒளித்து வைக்கின்றனர். இதை வீட்டின் கேப்டன் தினேஷ் கண்டுபிடித்து எடுத்து விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 தற்போது 14 பேராக குறைந்திருக்கிறது. இதில் இந்த வார திருப்பமாக மூன்று பூகம்பம் டாக்குகள் வைக்கப்படும் என்றும், இந்த டாஸ்க்கில் ஒரு வேளை வெற்றி பெற போட்டியாளர்கள் தவறினால், அவர்களிலிருந்து மூன்று பேரை வெளியே அனுப்பிவிட்டு, ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறிய பழைய மூன்று போட்டியாளர்களை உள்ளே அனுப்ப பிக் பாஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்று இரண்டாவது டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குச்சியில் பந்துகளைப் பிடித்துக் கொண்டே போட்டியாளர்கள் மூன்று நிமிடம் நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் பலரும் இந்த போட்டியில் தோல்வியே தழுவுகின்றனர். இதனால் வீட்டில் இருந்து சர்க்கரை அல்லது உப்பை தியாகம் செய்து விடுமாறு பிக் பாஸ் அறிவுறுத்துகிறார். போட்டியாளர்கள் பலரும் சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஒளித்து வைத்துக் கொள்கின்றனர். இதனால் கடுப்பான கேப்டன் தினேஷ் ஒளித்து வைத்து அனைத்தையும் எடுத்து விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television