இந்த ஓநாய் கூட்டத்தை முதல்ல உடைக்கணும்.! அர்ச்சனாவிடம் கூறிய தினேஷ்.! உருவான புது கூட்டணி

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மாயா மற்றும் பூர்ணிமா கூட்டத்தை பிரிக்க வேண்டும் என்று தினேஷும் அர்ச்சனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் தினேஷை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று சொல்லி மாயா பூர்ணிமா இன்னொரு பக்கம் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 53 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் ‘பூகம்பம்’ என்கிற பெயரில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓநாய் கூட்டத்தை முதல்ல உடைக்கணும்.! அர்ச்சனாவிடம் கூறிய தினேஷ்.! உருவான புது கூட்டணி 1

ஒருவேளை இந்த ‘பூகம்பம்’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வியுறும் பட்சத்தில் அவர்களிலிருந்து மூன்று பேரை வெளியே அனுப்பிவிட்டு ஏற்கனவே எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டு இருக்கிறார். போட்டிகள் கடுமையாக நடந்து வரும் நிலையில் போட்டியாளர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். எனவே இந்த முறை வைல்டு கார்டு என்ட்ரி கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோர் அனைவரும் அமர்ந்து இந்த நரி கூட்டம் கண்டிப்பாக இந்த முறை உடையும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அர்ச்சனா கூறும்பொழுது, மாயா எதற்காக பணிந்து விளையாடுகிறார்? என்பது எனக்கு புரியவில்லை என்று கூறுகிறார்.

அதே சமயம் மாயாவும் பூர்ணிமாவும் தினேஷை வீழ்த்துவது குறித்து சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் நிரம்பிய இடமாக பிக் பாஸ் தற்போது காட்சியளிக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்