டார்கெட் செய்த விஷ்ணு.! வெளுத்து வாங்கிய அர்ச்சனா.! பதில் சொல்ல முடியாமல் திணறும் விஷ்ணு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல திருப்பங்கள், சண்டைகள் என்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. அதில் கேப்டனாக தேர்வாகி இருக்கும் விஷ்ணு, தற்போது அர்ச்சனாவை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பு முடிவு செய்து இருக்கிறார். இதை எதிர்த்து அர்ச்சனா தற்போது கேள்வி கேட்கிறார். அர்ச்சனாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விஷ்ணு திணறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டார்கெட் செய்த விஷ்ணு.! வெளுத்து வாங்கிய அர்ச்சனா.! பதில் சொல்ல முடியாமல் திணறும் விஷ்ணு.! 1

இந்த வாரம் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் என்று நிக்சன், ஜோவிகா மற்றும் விஷ்ணுவை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு கேப்டன்சிக்கான போட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘கேப்டன்’ என்று எழுதப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுத்துக்களை சரியாக பொருத்துபவரே இந்த வார கேப்டன் எனக் கூறப்படுகிறது. அந்தப் போட்டியில் விஷ்ணு வெற்றி பெற்றிருக்கிறார். நிக்சன் நூலிழையில் தவற விடுகிறார். அதே போல கேப்டன் பதவியை இழந்த ஜோவிகா மீண்டும் கதறி அழத்தொடங்குகிறார். இந்த நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஆறு பேரை தேர்ந்தெடுக்க கேப்டனிடம் சொன்ன நிலையில் விஷ்ணு அர்ச்சனாவை தேர்ந்தெடுக்கிறார்.


அதற்கு காரணம் கூறும்பொழுது, முதல் இரண்டு வாரங்கள் அர்ச்சனா அழுது கொண்டிருந்தீர்கள், எனவே மக்கள் மனங்களில் அப்படித்தான் பதிவாகி இருப்பீர்கள் என்று விஷ்ணு கூறுகிறார். இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ளாத அர்ச்சனா, நீங்கள் கூடத் தான் பூர்ணிமாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், அப்போது நீங்கள் மக்கள் மனங்களில் அப்படித்தான் பதிவாகி இருப்பீர்கள்? என்று விஷ்ணுவை வெளுத்து வாங்குகிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் விஷ்ணு திணறிக் கொண்டிருக்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்