“நான் உன்ன விட்டுட்டு போய்டுவேன்” நிக்ஸனுடன் பேசும் ரவீனாவை பிளாக்மெயில் செய்யும் மணி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிக்சனுடன் நெருங்கி பழகும் ரவீனாவை மணி மிகவும் கட்டுப்படுத்துகிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மணி அல்லது ரவீனா இருவரில் ஒருவரை வெளியே அனுப்புமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மணி மற்றும் ரவீனா இருவரும் வெளியிலிருந்து நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் உன்ன விட்டுட்டு போய்டுவேன்" நிக்ஸனுடன் பேசும் ரவீனாவை பிளாக்மெயில் செய்யும் மணி.! 1
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே இருவரும் ஒன்றாக இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். பலரும் இவர்களின் இந்த நடவடிக்கையை விரும்பவில்லை. ரவீனா தனித்துவமான போட்டியாளர், அவர் சிந்தனை நன்றாக இருக்கிறது என்ற போதிலும் பல இடங்களில் மணியின் குரலாகவே ஒலிக்கிறார். கேப்டன்ஸி டாஸ்க்குகள் போன்ற எந்த டாஸ்க் எடுத்தாலும் மணி பெயரையே உச்சரிக்கிறார். அதுபோல மணியும் ரவீனா பெயரைத் தான் கூறிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் இந்த ஒற்றுமையைப் பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைப் பார்த்து ரசிகர்கள் மணியை வெளியே அனுப்புமாறு கூறி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் ரவீனா நிக்சன் உடன் பேசுவது மணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நிக்சனுடன் பேசுவதை நிறுத்துமாறு ரவீனாவை மணி கட்டாயப்படுத்துகிறார். இல்லையென்றால் நான் வெளியேறி போய்க்கொண்டே இருப்பேன் என்று ரவீனாவை எமோஷனலாக மணி பிளாக்மெயில் செய்கிறார். இது பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்