மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண்.! பிக்பாஸிடம் வைத்த கோரிக்கை.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பிரபல நடிகராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்திருக்கிறார். அவர் பிக் பாஸிடம் இன்றைக்கு ஒரு நாள் அனுமதி கொடுத்தீர்கள் என்றால் இந்த வீட்டில் தங்கிவிட்டு செல்வேன் என்று கூறி பிக் பாஸிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு பிக் பாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் சீசன் 1ல் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து இறுதிவரை வந்த போட்டியாளர்களில் ஒருவர்தான் நடிகர் ஹரீஷ் கல்யாண். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண்.! பிக்பாஸிடம் வைத்த கோரிக்கை.! ப்ரோமோ இதோ.! 1
ஹரிஷ் கல்யாண் திறமையான நடிகராக இருந்த போதும் அவருக்கு சரியான திரைப்படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் மனம் தளராமல் நடித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் ஒரு திரைப்படம் தான் ‘பார்க்கிங்’. இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. சென்னையில் கார் வைத்திருக்கும் ஒருவர் வாடகை வீட்டில் இருக்கும் பொழுது, ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மிக அழகாக இந்த ட்ரைலர் விளக்கி இருந்தது. ட்ரைலரைப் பார்த்த பலரும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் கார் வைத்திருக்கும் போது சந்திக்கும் பிரச்சினைகளை அழகாக கூறி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது் இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் வந்திருக்கிறார். உள்ளே வந்த அவர் தனக்கு நேரம் போதவில்லை, இன்று ஒரு நாள் இரவு இந்த தங்குவதற்கு அனுமதி கொடுக்குமாறு கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்