பிக் பாஸ் சீசன் 7, 55 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்பு எப்போது போல் இல்லாத அளவிற்கு ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என்று வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு வித்தியாசமான நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். அவர்களிலிருந்து நேற்று இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு, எலிமினேட் ஆகி சென்ற இரண்டு பேரை மீண்டும் பிக் பாஸ் விற்குள் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தனர். ப்ராவோ மற்றும் அக்ஷயா வெளியேறிய நிலையில், விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் உள்ளே வந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் உள்ளே வந்த உடனே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்து இருந்தனர். ஹவுட்ஸ்மேட்ஸ் பற்றி அவர்கள் கூறிய கருத்தும், வெளியில் நடந்தவை பற்றி அவர்கள் பேசியதும் ஹவுஸ் மேட்ஸ் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. குறிப்பாக நிக்ஸன் வினுஷா குறித்து பேசியது பற்றியும் ஐசுவிடம் அவர் நடந்து கொண்ட முறை பற்றியும் விளாசி இருந்தார். தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. அதில் பலரும் சரவண விக்ரம் மற்றும் அனன்யாவை நாமினேட் செய்கின்றனர். தொடர்ந்து மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.
“ஒன்று இந்த வீட்டில் நான் இருக்க வேண்டும் இல்லை, பூர்ணிமா இருக்க வேண்டும் என்று மாயா கூறுகிறார்”. இதைக் கேட்ட பூர்ணிமா மணமடைந்து கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television