முதல் நாளே அதிரடி காட்டிய பிக்பாஸ்.! இரண்டு நாமினேஷன் என சொன்னதால் ஷாக் ஆன ஹவுஸ் மேட்ஸ்.!!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரமே முதல் நாமினேஷனை துவங்கி அதிரடி காட்டியுள்ளனர். இதில் பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி நாமினேஷன் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதில் பலர் கூல் சுரேஷ், வனிதாவின் மகள் ஜோவிகா, பவா செல்லதுரை போன்ற பலரை நாமினேசன் செய்கின்றனர். முதல் வாரத்திலேயே தொடங்கும் நாமினேஷன் ஆக இந்த சீசன் தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் நாளே அதிரடி காட்டிய பிக்பாஸ்.! இரண்டு நாமினேஷன் என சொன்னதால் ஷாக் ஆன ஹவுஸ் மேட்ஸ்.!! 1

பிக்பாஸ் சீசன் 7 இந்த வாரம் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்று முதல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. முதலில் வெளியான இரண்டு ப்ரோமோக்களில் இந்த வார தலைவர் விஜய் வர்மாவை கவராத ஆறு பேரை தனியாக பிரித்து பக்கத்தில் இருக்கும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவர்கள் வெளியே வரக்கூடாது, அவர்கள் வெளியே வரும் வரை பிக்பாஸ் அவரிடம் பேச மாட்டார் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தான் சமைக்க வேண்டும், மூன்று வேலையும் அவர்கள் ஒரே உணவை சாப்பிட வேண்டும். பாத்ரூம் அனைத்தையும் அவர்கள் தான் கழுவ வேண்டும் என்று விதிகள் விதிக்கப்படுகிறது.


ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது அடுத்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரமே நாமினேஷனை தொடங்கி இருக்கின்றனர். மொத்தம் இரண்டு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. பலரும் கூல் சுரேஷ், வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார் போன்றோரை நாமினேஷன் செய்கின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்