மோதிக்கொள்ளும் கேப்டன் விஜய் வர்மா மற்றும் பிரதீப்.! வேடிக்கை பார்க்கும் கூல் சுரேஷ்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பமான சில நாட்களிலேயே தற்போது இந்த வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 18 போட்டியாளர்களில் கடைசியாக வந்த விஜய் வர்மா வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரிடம் பிக் பாஸ் உங்களை கவராத ஆறு பேரை கூறுமாறு சொல்ல, அவர் பிரவீனா, வினுஷா தேவி, அனன்யா ராவ், ஐஷூ, பவா செல்லதுரை, மற்றும் நிக்சன் ஆகிய ஆறு பேரை கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மோதிக்கொள்ளும் கேப்டன் விஜய் வர்மா மற்றும் பிரதீப்.! வேடிக்கை பார்க்கும் கூல் சுரேஷ்.! 1
உடனே அந்த ஆறு பேரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லுமாறு பிக் பாஸ் அறிவுறுத்துகிறார். மேலும் அவர்களுடன் பேசமாட்டேன், அவர்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப் படுகிறது. மேலும் நேற்றே நாமினேஷன் பிராசஸும் நடந்து முடிந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் உணவு சமைக்க வேண்டும், பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது, வீட்டில் இருக்கும் அனைத்து பாத்ரூம்களையும் அவர்கள் மட்டுமே கழுவ வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டில் உணவு சமைக்க விசித்ரா உதவி செய்து கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த பிக்பாஸ் விசித்ராவையும் யுகேந்திரனையும் கடிந்து கொள்கிறார். அவர்கள் இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லுமாறு கூறுகிறார். அப்போது பிரதீப் அப்படி என்றால் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருந்து இரண்டு பேரை இங்கு அனுப்புங்கள் என்று கூற, விசித்ரா பிரதீப்பிடம் சண்டை போடுகிறார். அதை எப்படி நீங்கள் சொல்லலாம்? என்று விசித்ரா பிரதீப்பிடம் சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்