சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பென்னி தயாள் தற்போது கண்கலங்கி அழுதுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. உடைந்து போய் அழுத அவரை மற்ற நடுவர்களாக இருக்கும் உன்னி கிருஷ்ணன், அனுராதா போன்றவர்கள் தேற்றியுள்ளனர். தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடையாளத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். பாட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எட்டு பருவங்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனில் அடி எடுத்து வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் என்று இரண்டு வகையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் சூப்பர் சிங்கர் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பது உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எஸ். பி. பாலசுப்ரமணியம், பி சுசீலா, எஸ் ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி போன்ற பழம்பெரும் பாடகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பலமுறை நடுவர்களாகவும் வந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் மாகாபா மற்றும் பிரியங்கா. இதில் மாகாபா ஆனந்த் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா 2015 ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன், சின்மயி, திவ்யா, பாவனா என்று பலரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். தற்போது மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் சூப்பர் சிங்கரின் அங்கமாகவே மாறிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டாப் 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த வாரம் “அன்புடன் நான்” என்ற பெயரில் தங்கள் அன்பை பிடித்தமானவர்களுக்கு இசையால் அர்ப்பணிக்கும் சுற்று நடந்துள்ளது. அதில் போட்டியாளர் அபிஜித் பென்னி தயாளுக்காக ஒரு பாடல் ஒன்றை அர்பணித்துள்ளார். இந்த சுற்று அறிவிக்கப்பட்ட உடனேயே நான் பென்னி சாருக்காக இதை செய்ய வேண்டும் என்று நினைத்ததாகவும், பென்னி தனக்கு சகோதரர் போன்றவர் என்றும் அபிஜித் பேசினார். இதை கேட்ட பின் மனம் கலங்கிய பென்னி இதற்கெல்லாம் நான் தகுதியானவனா என்று தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கலங்கி அழுதார். மனம் உடைந்து அழுத பென்னி தாயாளை உன்னிகிருஷ்ணன், அனுராதா போன்றவர்கள் தேற்றினர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television