தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக நடித்து இன்று இயக்குனராக உருவெடுத்து உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகிய காஞ்சனா படத்தின் நான்கு பாகங்களும் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது. தொடர்ந்து பல இயக்குனர்களுடன் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடிப்பு மட்டுமில்லாமல் தொடர்ந்து ஏழை மாணவர்களை படிக்க வைத்தும், பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார். உதவிகளை செய்வதற்காகவே மாற்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் தனது 25வது படத்திற்காக பிரபல தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா உடன் கைகோர்த்து உள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பென்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காண அதிகாரபூர்வ அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Embed Video Credits : THE ROUTE