Categories: சினிமா

பென்ஸ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு..! களம் இறங்கும் சாய் அபியங்கார்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லொகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் இயக்குனராக அடியெடுத்து வைத்து, இன்று தனக்கான மிக பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார் லோகேஷ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் , லியோ என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பென்ஸ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு..! களம் இறங்கும் சாய் அபியங்கார்..! 1

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.இப்படத்தினை தொடர்ந்து இவர் எழுதிய பென்ஸ் படம் உருவாக உள்ளது. ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது சாய் அபேக்கர் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்