Categories: சினிமா

பரத், வாணி போஜன் நடிப்பில் குலை நடுங்க வைக்கும் “மிரள்” படத்தின் ட்ரைலர்.!

வெளியிட்டது

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள படம் தான் மிரள். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ராட்சசன் மற்றும் ஓ மை கடவுளே படத்தை தயாரித்த டில்லிபாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் டில்லி பாபு ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். இந்த படம் வருகிற நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பரத், வாணி போஜன் நடிப்பில் குலை நடுங்க வைக்கும் "மிரள்" படத்தின் ட்ரைலர்.! 1

இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கியுள்ளார். கதையின் பின்புலமும், கதை நகரும் விதமும் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாடி இருக்கும் ஆலைகளை சுற்றியே படம் இருக்கும், பல இடங்களில் அழுத்தமான கதை அமைப்பும், மர்மமும் கலந்து இருப்பதால் படம் மிக அருமையாக வந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆபத்தான இடத்தில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஹீரோயின் பற்றி கதை நகர்கிறது.

மேலும் இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஊரில் இருந்து கிளம்பும் பரத் வாணி போஜன் மற்றும் குழந்தைகள் வரும் ஊருக்கு வழியில் சார் பஞ்சர் ஆகி விடுகிறது. அங்கு சில உருவங்கள் காரை சூழ்ந்து கொண்டுள்ளது. அவர்களிடம் மாட்டி தவிக்கும் பரத் வாணி போஜனை சுற்றி கதை நகர்கிறது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசரை நீங்களும் காண..Watch the video below…

Youtube Video Code Embed Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்