எங்களை விட்ருங்க அங்கிள்.! தீவிரவாதிகள் காலில் விழுந்து கதறி அழும் ஹேமா மற்றும் லட்சுமி

வெளியிட்டது

பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நடந்து வருகிறது. தற்போது அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்யும் பாரதி பதற்றத்தினால், சரியாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் போய் உள்ளது. இதனால் தீவிரவாதிகள் பாரதியின் மகள்களில் இருவரில் ஒருவரை சுட்டு விட முடிவு செய்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடந்து வருகிறது. பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் சூழ்ந்து விட்டனர். அமைச்சர் ஒருவரை உயிரோடு கொடுத்தால் தான் இந்த மருத்துவமனையை விடுதலை செய்வோம் என்றும், அரசு தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை இந்த மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று தீவிரவாதிகள் சபதம் எடுத்துள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

எங்களை விட்ருங்க அங்கிள்.! தீவிரவாதிகள் காலில் விழுந்து கதறி அழும் ஹேமா மற்றும் லட்சுமி 1

மேலும் அமைச்சர் ஒருவர் இதய நோயால் உயிருக்கு போராடிவரும் நிலையில், அவரை உயிருடன் திருப்பிக் கொடுத்தால் தான் மருத்துவமனையை விடுவிப்போம் என்று தீவிரவாதிகள் கூறுகின்றனர். இதனால் அந்த அமைச்சருக்கு பாரதி இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார்.அப்போதுதான் தனது குடும்பத்தையும், மருத்துவமனையில் உள்ள மற்றவர்களையும் காப்பாற்ற முடியும் என்று பாரதி எண்ணுகிறார். அதற்காக அமைச்சருக்கு இதயம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறார். ஆனால் அவரால் பதட்டத்தினால் சரியாக அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதை பார்த்த ஒரு தீவிரவாதி மற்றொரு தீவிரவாதிக்கு போன் செய்து, அமைச்சரை உயிருடன் கொண்டுவர முடியாது போல, எனவே பாரதியின் மகள்களில் இருவரை ஒருவர் கொன்றுவிடு என்று கூறுகிறார்.

இதனால் ஹேமாவிடமும், லட்சுமியிடமும் தீவிரவாதி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அப்போது லட்சுமி எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் அங்கிள் என்று கதறி அழுகிறார். இதை பார்த்த கண்ணம்மா கோபம் கொள்கிறார். மற்றவர்கள் பயத்தில் கதறி அழுகிறார்கள். கண்ணம்மா தீவிரவாதிகளிடமிருந்து குழந்தைகளை மீட்பாரா? இல்லையா? என்பது வரும் நாட்களில் தெரியவரும். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்