இனி இவருக்கு பதில் இவர்.! பாரதி கண்ணம்மா சீசன் 2வில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.!

வெளியிட்டது

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாகம் ஆரம்பித்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் முதல் விலகலாக நடிகை ஒருவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. பாரதி கண்ணம்மா சீசன் 1ல் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த கதை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் கண்ணம்மா, சௌந்தர்யா, அஞ்சலி போன்றவர்கள் கதாபாத்திரங்களை ஒட்டியே தற்போதும் எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணம்மாவக நடித்த வினுஷா தேவியே இந்த முறையும் கண்ணமாவாக நடிக்கிறார். பாரதியாக ரோஜா சீரியலில் நாயகனாக நடித்து வந்த சிபு சூரியன் நடிக்கிறார். மேலும் சௌந்தர்யா அதே கதாபாத்திரத்தில் பாரதியின் அம்மாவாக தொடர்கிறார். தீபா ஷங்கர் கண்ணம்மாவின் அம்மாவாக நடிக்க வந்திருக்கிறார். இதில் பாரதி சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் ஆனாலும் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இனி இவருக்கு பதில் இவர்.! பாரதி கண்ணம்மா சீசன் 2வில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.! 1
பாரதி படிக்காமல் ஊரில் ரவுடித்தனங்கள் செய்து கொண்டிருக்கிறார், இதை நினைத்து தாய் சௌந்தர்யா மிகவும் கவலையில் இருக்கிறார். மற்றொருபுறம் கண்ணம்மா சிறையிலிருந்து வெளியே வருகிறார். ஆனால் உண்மையில் இவர் கண்ணம்மா கிடையாது, இவர் பெயர் சித்ரா. சிறையிலிருந்து வெளியே வரும் சித்ரா எங்கு செல்வது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு கண்ணம்மா என்கிற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. ஆனால் ரவுடிகள் கண்ணம்மாவை சுட்டுக் கொன்று விட, நான்தான் கண்ணம்மா என்று பொய் சொல்லி நிஜ கண்ணம்மாவின் வீட்டிற்குள் நுழைகிறார் சித்ரா. இங்கிருந்து கதை தொடங்குகிறது. முந்தைய சீசனுக்கும் இந்த சீசனுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் பாரதி கண்ணம்மா சென்று கொண்டிருக்கிறது. பலரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 வை பார்ப்பதாக தெரியவில்லை. ப்ரோமோக்களும் அந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுவது இல்லை. வரவேற்பை பெறாத நிலையில் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீசன் 2.

இந்த நிலையில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தாஸ் என்பவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக சாய் ரித்து என்பவர் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வரவேற்பு பெறாத நிலையில் தற்போது முதல் விலகலாக ஒரு நடிகை விலகி இருப்பது தற்போது அதிர்ச்சியை பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்