இயக்குனர் பேச பேச உடைந்து அழுத பாரதி கண்ணம்மா சீரியல் டீம்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் வெளியான வீடியோ.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. கடைசி நாள் சூட்டிங்கில் இருந்து இயக்குனர் பேசும்பொழுது அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கண்கலங்கி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது நிறைவடைய இருக்கிறது. ஆரம்பத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த சீரியலை விட்டு விலகிய போதிலும் சீரியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. பாரதியின் மனைவி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுகிறார் பாரதி. அதன் பின்னர் வெளியே வந்த கண்ணம்மா தனி ஒரு பெண்ணாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தனது மனைவி கண்ணம்மா மீது எந்த குறையும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் பாரதி. மேலும் தனக்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகள் தான் என்றும் அவர் டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக அறிந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பேச பேச உடைந்து அழுத பாரதி கண்ணம்மா சீரியல் டீம்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் வெளியான வீடியோ.! 1
தன் தவறை உணர்ந்த பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக முயற்சிகள் செய்கிறார். ஆனால் கண்ணம்மா அவரை வெறுத்து குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் சென்று தனியாக வசித்து வருகிறார். அங்கு வரும் பாரதி, கண்ணம்மாவிடம் சேர்வதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார். அப்போது நடந்த ஒரு சண்டையில் பாரதியின் தலையில் அடிபட்டு பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விடுகிறது. பழைய பாரதியாக அவர் திரும்பி வருகிறார். இதை புரிந்து கொள்ளும் கண்ணம்மா பாரதி மீது எந்த தவறும் இல்லை அவர் சூழ்நிலையால்தான் அப்படி நடந்து கொண்டார் என்பதை புரிந்து கொண்டு தற்போது அவரிடம் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்து இருக்கிறார். தற்போது இந்த கதையின் இறுதி அத்தியாயங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்துடன் இந்த கதை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு கெஸ்ட் ரோலில் பலர் வந்திருக்கின்றார்.


குறிப்பாக கவிஞர் சினேகன், கன்னிகா, பிக்பாஸ் புகழ் ஷிவின், தமிழும் சரஸ்வதியும் நாடகக் குழுவில் இருந்து வசு மற்றும் தமிழ், ஆர் ஜே பாலாஜி என அனைவரும் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா இறுதி நாள் கடைசி ஷூட்டிங்கின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பாரதி கண்ணம்மாவின் இயக்குனர் பிரவீன் பென்னட் நான்கரை வருட பயணத்திற்கு நன்றி சொல்கிறார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு பாரதி, கண்ணம்மா, குழந்தைகள் ஹேமா லட்சுமி அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். அந்த காணொளியை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்