முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா.! கிளைமாக்ஸ் காட்சிகள் ஷூட்டிங்கை வெளியிட்ட வெண்பா.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய உள்ளதாகவும், கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் வெண்பா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இந்த கதை வித்தியாசமான நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. அதாவது பாரதியின் தோழி வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், அவர் வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக அவருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருப்பதாக கூறி நாடகமாடி வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா.! கிளைமாக்ஸ் காட்சிகள் ஷூட்டிங்கை வெளியிட்ட வெண்பா.! 1

ஆனால் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்வார். கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியும் பாரதியை காதலித்து வருவார். பின்னர் அஞ்சலி பாரதியின் தம்பி அகிலனை திருமணம் செய்து கொண்டு பாரதியை துன்புறுத்தி வருவார். பாரதியின் தாயாருக்கு கருப்பு நிறம் என்றாலே பிடிக்காது. ஆனால் கண்ணம்மா கருப்பாக இருப்பதால் அவருக்கு கண்ணம்மாவை சுத்தமாக பிடிக்காது. இதனால் அஞ்சலியும் பாரதியின் தாயாரும் சேர்ந்து கொண்டு கண்ணம்மாவை கொடுமைப்படுத்தி வருவார்கள். பிறகு ஒரு கட்டத்தில் பாரதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும். ஆனால் தனக்கு குழந்தை பிறக்காது என்று வெண்பாவால் ஏமாற்றப்பட்டு வந்த பாரதிக்கு குழந்தைகள் பிறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் பாரதிக்கு இந்த குழந்தைகள் தன்னுடையதுதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்காக தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகள் வந்து பாரதிக்கு உண்மைகள் தெரிந்து விடுகிறது. மேலும் வெண்பாவும் நான் தான் உன்னுடைய டெஸ்ட் முடிவுகளை மாற்றி வைத்து விட்டேன் என்ற உண்மைகளை கூறுகிறார். தற்போது துர்கா திரும்பி வந்து வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறிய பின் வெண்பா ஜெயிலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெண்பா தனது யூட்யூப் பக்கத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்படும் நிகழ்வை vlog ஆக எடுத்து பதிவு செய்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

Youtube Video Code Embed Credits: Farina Rahman

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்