ஹேமாவை லாரி ஏற்றி கொலை செய்தது நான் தான் என்று பாரதி முன்பே வெண்பா கூறியிருக்கும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தற்போது கிளைமாக்ஸை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் வெண்பாவின் உண்மை முகத்தை பாரதி அறிந்து கொள்கிறார். பாரதி தனக்கு பிறந்த லட்சுமியும் ஹேமாவும் தன் குழந்தைகள் தான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக அறிந்து கொண்டார். இவர் தற்போது டெஸ்ட் ரிசல்ட் உடன் சென்னைக்கு திரும்பி தனது மனைவி மற்றும் மகளிடம் உண்மைகளை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். மேலும் கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் திரும்பி சேர்ந்து வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்து கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். கீழே உள்ள ப்ரோமோவை பார்க்கவும்.

அப்போது வில்லி வெண்பா எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்து விடக்கூடாது என்று சில சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாரதி வெண்பாவை திட்டி நான் கண்ணம்மாவுடன் தான் வாழ்வேன் என்று கூறிவிடுகிறார். இதனால் வெண்பா சில உண்மைகளை கூறுகிறார். பாரதியின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தான் எவ்வாறு நாசப் படுத்தினேன் என்று அவர் ஒவ்வொரு கதையாக கூறத் தொடங்குகிறார். அப்போது அவருடைய உண்மை முகத்தை பாரதி தெரிந்து கொள்கிறார். பாரதி கல்லூரியில் படுத்து கொண்டிருந்தபோது ஹேமா என்கிற ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஹேமா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்தார். ஹேமா, வெண்பா, பாரதி மூவரும் நல்ல நண்பர்கள். இதில் வெண்பாவுக்கு பாரதி மீது காதல் இருந்தது. அதனால் வெண்பா ஹேமாவை வைத்து தனது காதலை பாரதிக்கு தெரியப்படுத்துவார்.
ஆனால் பாரதி ஹேமாவை காதலிப்பதாக கூறிவிடுவார். இது வெண்பாவுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். அதனால் லாரியை ஹேமாவின் கார் மீது மோதவைத்து ஹேமாவை வெண்பா கொலை செய்து விடுவார். அதனால் தான் பாரதி தன்னுடைய மகளுக்கு முன்னாள் காதலி நினைவாக ஹேமா என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது இந்த கதையை வெண்பா பாரதியிடமும் மற்ற அனைவரிடமும் கூற அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இவ்வளவு மோசமானவரா வெண்பா என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television