பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் பாரதி எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணம்மாவை கண்டுபிடித்துவிட்டார். கண்ணம்மாவிடம் வந்து பேசும் பொழுது அவர் பாரதியிடம் பேச மறுத்து விலகிச் செல்கிறார். அப்போது கண்ணம்மா இந்த ஆள் என் கையைப் பிடித்து இழுத்து விட்டான் என்று கத்தி கூச்சல் போட்டு ஊரையே கூட்டி விட்டார். பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து ஏதாவது திருப்பங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் கண்ணம்மா தற்போது தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊரை காலி செய்து விட்டு தனது தந்தையின் பிறந்த ஊருக்கே சென்று விட்டார். அது ஒரு கிராமம் என்பதால் அங்கு டைலரிங் வேலை பார்த்தும், மாவு அரைத்துக் கொடுத்தும் தனது பிழைப்பை ஓட்டிக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார் கண்ணம்மா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார் பாரதி. அப்போது அவர் போனுக்கு ஒரு மெசேஜ் ஒன்று வருகிறது. அதில் லொகேஷன் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதை அனுப்பியது ஹேமாவாகத்தான் இருக்க வேண்டும். அவள் தான் தனக்காக இதை செய்திருக்கிறார் என்று பாரதி நம்பிக்கொண்டு அந்த இடத்தை தேடி செல்கிறார். பின்னர் ஒரு வழியாக அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். அப்போது கண்ணம்மாவை தள்ளி இருந்து பார்க்கும் பாரதி, கண்ணம்மாவிடம் சென்று பேச முயற்சிக்கிறார். ஆனால் கண்ணம்மாவோ எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறி பாரதியுடன் பேச மறுக்கிறார். பின்னர் கண்ணம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பாரதி கெஞ்சி கொண்டிருக்கிறார்.
அப்போது கண்ணம்மா கத்தி கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விடுகிறார். பின்னர் பஞ்சாயத்து நடக்கிறது. அதில் கணவன் மனைவி பிரச்சனை என்றால் அது வீட்டிற்குள் தான் நடக்க வேண்டும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விடு என்று பாரதியை ஊரார் திட்டி அனுப்பி விடுகின்றனர். இனி பாரதி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அந்த புரோமோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television