பாரதியால் கண்ணம்மாவுக்கும் தாமரைக்கும் வந்த சண்டை.! இனி என்ன ஆகப் போகுதோ?

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியை லட்சுமி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. இத்தனை நாள் பாரதி, தன்னுடைய மனைவி மீது சந்தேகப்பட்டு அவருக்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே இல்லை என்று ஒதுக்கி வைத்திருந்தார். இருந்தபோதிலும் ஒரு குழந்தை பாரதியிடமும், ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக பாரதி இந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் தான் என்பதையும், கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் கண்ணம்மா காலில் விழுந்து கதறி தன்னுடன் மீண்டும் இணைந்து வாழுமாறும், குழந்தைகளுடன் சேர்ந்து புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BHARATHI KANNAMMA
ஆனால் கண்ணம்மாவோ இத்தனை நாட்களாக நாங்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் நீங்கள் வெண்பாவின் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தீர்கள். இப்போது உங்களுக்கு எங்கே இருந்து ஞானோதயம் வந்தது என்று பாரதியை நாக்கை புடுங்கும் விதமாக கேட்டுவிட்டு ஊரையே காலி செய்துவிட்டு தற்போது வேறு ஊருக்கு சென்று விட்டார். இப்போதே கண்ணம்மா மற்றும் குழந்தைகளை பாரதி தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாரதியின் மொபைலுக்கு லொகேஷன் மெசேஜ் வருகிறது. அந்த லொகேஷனை தேடிச் செல்லும் பாரதி கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் ஊர் பஞ்சாயத்தை கூட்டி பாரதி ஊரில் இருக்கக் கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர். அதையும் மீறி பாரதி இந்த ஊரில் தான் இருப்பேன் என்று சபதம் எடுக்கிறார்.

 

இந்த நிலையில் தற்போது பாரதி அந்த ஊரிலேயே கண்ணம்மா வீட்டிற்கு எதிரில் கிளினிக் ஒன்றை போட்டு இருக்கிறார். 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க இருப்பதாக கூவி கூவி அழைத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு வரும் தாமரை கண்ணம்மாவை பார்த்து என்ன உன் புருஷன் ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிட்டாரு போல என்று தாமரை கேட்க கண்ணம்மா கடுப்பில் அவர் என் கணவர் என்று கூறாதீர்கள் என்று கூறுகிறார். இதனால் தாமரை மற்றும் கண்ணம்மாவுக்கு நடுவில் சண்டை ஏற்படும் போல் உள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்