என்ன பாரதி?? கண்ணம்மா கூட ரொமான்ஸா? ஒரு புடவை செய்து கொடுத்தே கரெக்ட் பண்ணிட்டாரே.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக தாலி செய்வதற்காக பொன் உருக்கு வைபவம் நடைபெற இருக்கிறது. மருத்துவராக இருக்கும் பாரதிக்கு கண்ணம்மா என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் பாரதி ஏற்கனவே தனது தோழி வெண்பாவால் குழந்தை பிறக்காது என்று சொல்லி ஏமாற்றப்பட்டு வருகிறார். அப்போதுதான் பாரதி வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார் தன்னை மட்டும் திருமணம் செய்து கொள்வார் என்று வெண்பா இவ்வாறு சூழ்ச்சி செய்திருந்தார். இதை நம்பி பாரதியும் தனக்கு குழந்தை பிறக்காது என்று இத்தனை காலமாக ஏமாந்து இருந்தார். ஆனால் தனது மனைவி கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது, பாரதிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார் பாரதி. வெளியே வந்த கண்ணம்மா தனி ஒரு பெண்ணாக இருந்து பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன பாரதி?? கண்ணம்மா கூட ரொமான்ஸா? ஒரு புடவை செய்து கொடுத்தே கரெக்ட் பண்ணிட்டாரே.! 1
ஒரு கட்டத்தில் அனைவரும் சொல்வது போல கண்ணம்மா மீது எந்த குறையும் இல்லை அவர் நல்லவர் தான் என்பதை பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததின் மூலமாக கண்டுபிடித்து விட்டார். இரட்டை குழந்தைகளும் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்று பாரதி தெரிந்து கொண்டார். பின்னர் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார் பாரதி. ஆனால் கண்ணம்மா அவருடன் வாழ மறுத்து ஒரு கிராமத்தில் சென்று வசித்து வருகிறார். அங்கு வரும் பாரதி கண்ணம்மாவிடம் சேட்டை செய்து கொண்டிருக்கும் வில்லனிடம் மோதுகிறார். அப்போது வில்லன் அவரது தலையில் ஓங்கி பலமாக அடித்து விடுகிறார். இதனால் பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விடுகிறது. கண்ணம்மாவை மட்டும் அவருக்கு ஞாபகம் இருக்கிறது. பழைய நினைவுகளை போராடி கண்ணம்மா பாரதிக்கு வரவழைத்து விட்டார். தற்போது பாரதியும் கண்ணும்மாவும் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய இருக்கின்றனர்.

கண்ணம்மாவுக்காக தானே முகூர்த்த புடவை தன் கையால் நெய்திருக்கிறார் பாரதி. மேலும் தற்போது தாலி செய்வதற்காக பொன்னுருக்கு வைபவம் நடைபெறுகிறது. அப்போது தாலிக்கு வைத்திருந்த தங்கம் காணாமல் போய்விடவே பாரதி, கண்ணம்மாவின் தாயார் அணிந்திருந்த தாலியை பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறார். அதை வைத்து கண்ணம்மாவிற்கு தாலி செய்யுமாறு கொடுக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்