கண்ணம்மாவின் அம்மாவுக்கு திதி கொடுத்த பாரதி.! இந்த மாதிரி மருமகனை பார்த்ததே இல்லை.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் அம்மாவுக்கு பாரதி திதி கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட “கருத்தமுத்து” என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டு “பாரதி கண்ணம்மா” என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அருண் பிரசாத் பாரதியாகவும், நடிகை வினுஷா தேவி கண்ணமாகவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக நடித்து வந்தார். பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மாவின் அம்மாவுக்கு திதி கொடுத்த பாரதி.! இந்த மாதிரி மருமகனை பார்த்ததே இல்லை.! 1

இந்த நாடகத்தின் கதை குறித்து பார்த்தோமானால் கண்ணம்மா கருப்பாக இருக்கும் காரணத்தால் ஆரம்பத்தில் கண்ணாமவை மாமியார் கொடுமைப்படுத்துகிறார். பின்னர் சௌளந்தர்யா மனம் மாறி திருந்தி விடுகிறார். பாரதியின் தோழி வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கண்ணம்மா மீது தேவையில்லாத பழிகளை சுமத்துகிறார். குறிப்பாக பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி வெண்பா ஏமாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.இத்தனை ஆண்டுகளாக இந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்பி வந்தார். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு இந்த குழந்தைகள் தன்னுடையது தான் என்பது பாரதிக்கு தெரிய வருகிறது.

ஆனால் கண்ணம்மாவோ பாரதியை விட்டு பிரிந்து ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். கண்ணம்மா மற்றும் குழந்தைகளை தேடி பாரதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு மனமாற்றம் நடக்கிறதா? அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்? என்பது குறித்து கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்ணம்மாவின் அம்மாவுக்கு பாரதி திதி கொடுக்கிறார். அப்போது கண்ணம்மாவும் அருகில் அமர்ந்து காரியங்களை செய்கிறார். இதனால் கண்ணம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனமாற்றம் ஏற்பட்டு பாரதியை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..! 

Youtube Video Code Embed Credits: Vijay Television 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்